மியன்மார் சூறாவளியில் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கை வழங்கியுள்ள அன்பளிப்பு
மியான்மரில் மோச்சா (MOCHA) சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிலோன் தேயிலையை இலங்கை அரசு வழங்கியது.
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சுமார் 1 மெட்ரிக் தொன் சிலோன் தேயிலையை இலங்கை அரசாங்கம் இன்று (27.08.2023) கையளித்துள்ளது.
இந்த நன்கொடை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் மியன்மார் தூதுவர் ஹான் துவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமைக்கான அடையாளம்
மியன்மார் தூதுவர் ஹான் து இலங்கை அரசாங்கத்தின் இந்த ஒற்றுமைக்கான அடையாளத்திற்காக மியான்மர் அரசாங்கத்திற்கு உண்மையான பாராட்டுக்களை தெரிவித்ததுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு இருதரப்பு உறவுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மேலதிக செயலாளர் யசோஜா குணசேகர, பணிப்பாளர் நாயகம் வருண வில்பத, ஓ.எல். அமீர்ஜ்வாட் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.