வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு மீண்டும் நாட்டுக்குத் திரும்புபவர்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வழங்கப்படும் உதவிகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்து தொழில் தொடங்குபவர்களுக்கு தொழிலை மேம்படுத்த இங்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
வணிகத்தைத் தொடங்கவும் வணிகத்தை மேம்படுத்தவும் இங்கே உதவி வழங்கப்படுகின்றது.
வெளிநாட்டு ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் ஆண்டாக கடந்த ஆண்டை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பெயரிட்டுள்ளது.
இந்த ஆண்டு புலம்பெயர்ந்த தொழிலாளி தொழில்முனைவோராக மாறும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நாடு மீண்டு வர வேண்டுமானால், தொழில் முனைவோர் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |