சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான ரகசியம்
இலங்கையில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்காக டுபாய் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு சென்ற சிலர் தங்களது சுற்றுலா விசாவை பணி விசாவாக தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளை வழங்குவதாக கூறி இலங்கைப் பெண்களை ஓமானில் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அந்த கடத்தல் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பிரதான தரகர் மற்றும் துணைத் தரகர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும், டுபாயில் பல்வேறு சம்பவங்களால் தற்போது சிரமத்திற்குள்ளாகும் பெண்கள் உள்ளிட்ட மக்களுடன் ஐக்கிய நாடுகளின் சர்வதேச இடம்பெயர்வு திட்டம் செயற்பட்டு வருவதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan