நாடு திரும்புவதற்காக இராமநாதபுரத்தில் மண்டியிட்டு போராடும் யாழ். இளைஞன்
இலங்கையின் உள்நாட்டுப் போரின் காரணமாக, தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் குடியுரிமை அங்கீகாரம் அல்லது நாடு திரும்புவதற்காக போராடும் அவல நிலை தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய ஊடகங்கள் அண்மையில் பகிர்ந்த காணொளியில், சாதாரண வாழ்க்கை நடத்துவதற்கு உரிய அடையாள ஆவணங்கள் வழங்கப்படாததால், தனது பெற்றோர் வசிக்கும் இலங்கைக்கே திருப்பி அனுப்புமாறு கோரி இராமநாதபுரம் மாவட்டச் செயலகத்தின் முன் இளைஞர் ஒருவர் மண்டியிட்டு போராட்டம் நடத்திய காட்சி வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டச் செயலக அதிகாரி தன்னை இலங்கைக்கு அனுப்ப மறுப்பதாகவும், தன்னை இந்தியக் குடிமகனாக அங்கீகரித்து எந்த ஆவணமும் வழங்கவில்லை என்றும் அந்த இளைஞர் பொலிஸாரிடம் தெரிவிப்பதை காணொளி காட்டுகிறது.
10க்கும் மேற்பட்ட மனு
தாம் 10க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்டச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், கடந்த 22 வருடங்களாக இந்தப் பிரச்சினைக்காக போராடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தமது எக்ஸ் பதிவில் கருத்துரைத்துள்ள,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி;ன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குறித்த இலங்கை இளைஞர் நாடு திரும்புவதற்கும், இலங்கையி;ல் வாழ்வாதாரத்தை வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |