ஜப்பானிய நகரத்தில் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஜப்பான் - சிபா மாகாணத்தில் சம்மு நகரில் பதிவு செய்யப்படும் இலங்கையர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக சம்முக்குக் குடியேற்றவாசிகள் அதிகமானோர் வருவதாகவும் கூறியுள்ளது.
இவ்வாறு சென்றுள்ள இலங்கையர்களில் ஜப்பானிய மொழி பேச முடியாத குழந்தைகளுக்குக் கல்வி கற்பது உள்ளூர் ஆரம்ப, கனிஸ்ட மற்றும் உயர்நிலைப் பாடசாலைகளில் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது என்று ஜப்பானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சேவைகளில் நிபுணத்துவம்
சம்மு மாநகர அரசாங்கம் சில பள்ளிகளில் அத்தகைய குழந்தைகளுக்கு ஜப்பானிய மொழி வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
எனினும் புதிதாக வருபவர்களில் பலர் பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்வதில் சிரமப்படுகிறார்கள். 2013 ஏப்ரலில் சம்முவில் 57 ஆக இருந்த இலங்கையர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு பெப்ரவரி மாத இறுதியில் 750 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் பலர் பொறியாளர் மற்றும் சர்வதேச சேவைகளில் நிபுணத்துவம் அல்லது வேறு தொழில்களுக்குரிய விசாவில் ஜப்பானுக்கு வந்துள்ளதாக ஜப்பானிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஜப்பானுக்குத் தனியாக வந்த இந்த பணியாளர்கள், இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருகின்றனர் என்றும் அந்த செய்தி தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, நகரத்தில் உள்ள ஆரம்ப மற்றும் கனிஷ்ட, உயர்நிலைப் பள்ளிகளில்
சேரும் இலங்கைக் குழந்தைகளின் எண்ணிக்கை மார்ச் 2021 இல் 20 இல் இருந்து இந்த
ஆண்டு பெப்ரவரி பிற்பகுதியில் 71 ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்த செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri