இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றி நாடு திரும்பலாம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு

Sri Lanka India Bimal Rathnayake
By Theepan Aug 27, 2026 09:40 AM GMT
Report

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று(26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோருடன் இணைந்து நடைபெற்ற இச்சந்திப்பில், ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட மாவட்ட மட்டத்திலான முக்கிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றது.

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றி நாடு திரும்பலாம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு | Sri Lankans Refugees In India Can Return Home

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின் தலையீட்டின் மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்படி உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தற்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித் தாயகம் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடு திரும்பும் இவ்வாறான நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும், தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக தேவையான உதவிகள் வழங்கப்படும்.

அத்துடன், கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, தேசிய பாதுகாப்பையும் மக்களின் உரிமைகளையும் சமநிலையில் பேணியவாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள்

மேலும், 2025 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 65 ஏக்கர், கிளிநொச்சியில் 128 ஏக்கர், முல்லைத்தீவில் 615 ஏக்கர், மன்னாரில் 135 ஏக்கர் மற்றும் வவுனியாவில் 150 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றி நாடு திரும்பலாம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு | Sri Lankans Refugees In India Can Return Home

இதனிடையே, பலாலி விமான நிலைய வீதியின் கிழக்குப் பகுதியில் தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வீடுகளை அமைத்து நிரந்தரமாகக் குடியேறுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம்(25.08.2026) நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் பங்கேற்புடன் பிரதான நிகழ்வு நடைபெற்றது.

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றபோது அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில் 11,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று, அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அர்ப்பணிப்பின் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் பெரும் சோகம் : கோர விபத்தில் இளம் தாய் - பிறந்த குழந்தை உட்பட மூவர் பலி

இலங்கையில் பெரும் சோகம் : கோர விபத்தில் இளம் தாய் - பிறந்த குழந்தை உட்பட மூவர் பலி

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 1000க்கும் அதிகமான வாகனங்கள் ஏலத்தில்

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 1000க்கும் அதிகமான வாகனங்கள் ஏலத்தில்

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US