அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 1000க்கும் அதிகமான வாகனங்கள் ஏலத்தில்

Hambantota Luxury Cars
By Kamal Aug 27, 2026 05:52 AM GMT
Report

 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் அல்லது டெண்டர் முறையில் விற்பனை செய்து, சுங்க வரி மற்றும் களஞ்சியக் கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 109 ஆவது பிரிவின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், இது குறித்து இறக்குமதியாளர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கூறியுள்ளார்.

வாகன இறக்குமதி மூலம் கிடைக்கும் சுங்க வரி வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சுங்கத் திணைக்களத்தின் மொத்த இலக்கான 190.2 பில்லியன் ரூபாயில் இதுவரை 176.7 பில்லியன் ரூபாய் திரட்டப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 13 பில்லியன் ரூபாயை வரும் நாட்களில் ஈட்ட முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 1000க்கும் அதிகமான வாகனங்கள் ஏலத்தில் | Hambantota Port Vehicles Will Sale On Auction

வாகன வரி வருவாய் குறைந்ததையடுத்து, கூடுதல் கட்டணத்தை இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வாகன இறக்குமதி மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

செலாவணி வீத உயர்வு வாகனங்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,000-க்கும் அதிகமான வாகனங்கள் சுமார் மூன்று மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கியுள்ளன. சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 109 ஆவது பிரிவின் கீழ், இந்த வாகனங்களை ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனை செய்து சுங்க வரியை முதன்மையாக வசூலிக்கவும், பின்னர் துறைமுகத்திற்கான களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்தவும் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

விற்பனைக்குப் பின்னர் ஏதேனும் பணம் மீதம் இருந்தால், அதை சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்குத் திருப்பி வழங்கவும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக இறக்குமதியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

YOU MAY LIKE THIS VIDEO


10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US