ஜப்பானிலும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இலங்கையர்கள் (Photos)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் தலைநகர் டோக்கியோவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதில் இலங்கையை சேர்ந்த மாணவர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் உட்பட பலர் அரசியல் பேதங்களில் இன்றி கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்ஜீவ குணசேகர, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க நண்பர் எனக் கூறப்படுகிறது.
இவரும் அமெரிக்காவில் இருந்து வந்து ஜப்பானில் இலங்கை பெயரை அவமதிப்பு உள்ளாக்கி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் குற்றம் சுமத்தியுள்னர்.
ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகும் வரை தாம் தொடர்ந்தும் போராட்டங்களை நடத்த போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




