வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : பிரம்மிக்க வைக்கும் இன்றைய பெறுமதி
2021 ஆம் ஆண்டில், வணிக வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்கப் பொருட்களின் மதிப்பு 250 பில்லியன் ரூபா. இன்று அது 500 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது. எனவே, அது தொடர்பில் நாம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிறந்த தேசபக்தர்கள், அனுபவம் வாய்ந்த தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் எவரும் கடுமையான நெருக்கடியான காலகட்டத்தில் இந்த நாட்டின் பொறுப்பை ஏற்கவில்லை. மிகவும் சிரமப்பட்டு ஒரு நாடாக முன்னோக்கி வந்தோம். நாம் மேலும் செல்ல வேண்டும். நாம் அனைவரும் பட்ட துன்பங்களை கூறத் தேவையில்லை.
உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிடுகிறேன். 2021 ஆம் ஆண்டில், வணிக வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்கப் பொருட்களின் மதிப்பு 250 பில்லியன் ரூபா. இன்று அது 500 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது. எனவே, அது தொடர்பில் நாம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.
சில வீடுகளில் பெரியவர்கள் ஒரு வேளை உணவைத் தவிர்த்து விடுவார்கள். மற்றொரு பிரிவினர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க முடியாமல் தவித்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நான் ஆதரவைக் கோரியபோது வழங்கிய உதவியினால் இன்று இந்த நிவாரணங்களை நாங்கள் பெற்றுள்ளோம். ஜெனட் யெலன் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எங்களுக்கு ஆதரவளித்தனர். இன்று நாங்கள் வலுவாக முன்னேர முடிந்தது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் எங்களுக்கு கடன் வழங்கும் பல நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளோம். நாங்கள் அதன்போது இணங்கிய நிபந்தனைகளை பொருளாதார பரிமாற்றச் சட்டத்தில் சேர்த்துள்ளேன்.
இந்தப் பாதையில் நாம் தொடர்ந்தால், ஒரு நாடாக நாம் மீண்டு வரக்கூடிய திறன் உள்ளது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் திருத்தப்படும் என சிலர் கூறுகின்றனர்.
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என பகிரங்கமாக அறிவித்துவிட்டு தப்பி ஓடியவர்கள் இன்று பெண்களின் ஆதரவுகளால் கிடைத்த இந்த நிவாரணத்தை அகற்றுவோம் என கூறுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |