தெற்காசியாவில் முன்னிலை வகிக்கும் இலங்கையர்கள்
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, தெற்காசியாவில் இலங்கையர்கள் 102 என்ற சராசரி IQ(நுண்ணறிவு)அளவை கொண்டுள்ளனர்,
இதன்படி, உலகின் மிக உயர்ந்த சராசரி IQ அளவைக் கொண்ட முதல் 12 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவும் உள்ளது என்று சர்வதேச IQ தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகின் மிக உயர்ந்த IQ மட்டத்தில்
IIQஇன் படி, உலகளாவிய சராசரி IQ நிலை 100 ஆகும், இலங்கையில் இருந்து மொத்தம் 2840 பங்கேற்பாளர்கள் ஒரு நிலையான IQ சோதனையின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் சீனாவே உலகின் மிக உயர்ந்த சராசரி IQ மட்டத்தில் 107 என்ற அளவுடன் சராசரியுடன் முதலிடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நல்ல உணவுப் பழக்கம் உள்ள சிறுவர்கள் மற்ற சிறுவர்களை விட அதிக IQவைக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
தொடர்ந்து சதுரங்கம் விளையாடுவது சிறுவர்களின் IQக்களை அதிகரிக்கும் என்று 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்விலும் கண்டறியப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |