ரஷ்ய - உக்ரைன் போரில் ஈடுபட்ட இலங்கையர்களை மீட்க ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை
மியன்மாரில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய – உக்ரைன் போரில் ஈடுபட்ட இலங்கையர்களை மீட்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி இராஜத்தந்திரமட்ட பணியை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின்(sajith premadasa) வழிகாட்டலிற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மியன்மார் மற்றும் ரஷ்யாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
நாட்டின் இளம் தலைமுறையினரையும், ஓய்வு பெற்ற இராணுவத்தினரையும் பாதுகாக்கும் நோக்கின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி இந்நடவடிக்கையினை முன்னெடுத்து வந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்
குறித்த குழுவினர், இலங்கையின் மஹாநாயக்க தேரர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கையெழுத்திட்டுள்ள ஆவணத்தையும் அந்நாடுகளுக்கு கையளிக்கவுள்ளனர்.

இந்தக் குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜே.சி அலவத்துவல (Jc alavathuwala), சுஜித் சஞ்சய் பெரேரா(Sujith sanjay pererah), காவிந்த ஜயவர்தன(Kaavinda jayawardane), வசந்த யாப்ப பண்டார(wasandha yapa bandaara) உள்ளிட்டோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri