கட்டாரிலுள்ள இலங்கையர்கள் உடனடியாக பதிவு செய்யுங்கள் - தூதரகத்தின் அவசர அறிவிப்பு
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில்கொண்டு, கட்டாரில் வசிக்கும் அனைத்து இலங்கைப் பிரஜைகளும் தங்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில், இதற்காக வழங்கப்பட்டுள்ள ‘கூகுள் படிவத்தை’ பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கையர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக பதிவு செய்யுங்கள்
பிராந்தியத்தில் ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படும் பட்சத்தில், இலங்கையர்களுடன் விரைவான தொடர்புகளைப் பேணுவதற்கு இந்தத் தரவுகள் உதவும் எனவும், அவசர வெளியேற்றம் அல்லது பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுக்கும்போது தூதரகத்தின் ஒருங்கிணைப்புப் பணிகளை இது இலகுபடுத்தும் எனவும் கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த விடயங்களை உறுதிப்படுத்த இவ்வாறான தரவுச் சேகரிப்பு மிக அவசியம் எனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் பதற்றம் மற்றும் கடல்சார் அனர்த்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
எனவே, கட்டாரில் தங்கியுள்ள இலங்கையர்கள் தாமதமின்றி இந்தப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam