சீனாவின் மனிதக்கழிவுக்கு பணம் செலுத்த போகும் இலங்கை மக்கள்! செய்திகளின் தொகுப்பு(Video)
சீனாவின் மலக் கழிவுக்கு இலங்கை மக்கள் பணம் செலுத்த வேண்டிய நிலை வரும் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ( Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சீன உரக் கப்பலுக்கு நஷ்டஈடாக நாட்டு மக்களின் வரிப் பணமே வழங்கப்பட உள்ளது.
அரச தலைவர், நிதி அமைச்சரின் அமெரிக்க வங்கிக் கணக்கிலிருந்து பணம் அறவிடப்படாது எனத் தெரிவித்தார்.
மக்கள் பருப்பு வாங்கும் போதும், சீனி வாங்கும்போது, ரீலோட் செய்யும் போதும் வரியாக அறவிடப்பட்டுச் சேர்க்கப்பட்ட மக்களின் பணமே நஷ்டஈடாக வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,