வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (Video)
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இந்த ஆண்டில் 2 லட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் இறுதி வரையான தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
இதன்படி, மொத்தமாக 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 2,858 இலங்கையர்கள் தென் கொரியாவுக்கு வேலைக்காகச் சென்றுள்ளனர்.
தென் கொரியா
இந்த வருட இறுதிக்குள் மேலும் 5,000 இலங்கையர்கள் தென் கொரியாவுக்கு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான இலங்கையர்களின் தேவை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இக் காணொளியில் காணலாம்.