வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான ஆர்வம் அதிகரிப்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
வெளிநாட்டு தொழில்களுக்கான இலங்கையர்களின் கோரிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தில் பதிவு செய்து, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
தென் கொரியா
இந்த வருடத்தில் இதுவரை 2,885 இலங்கையர்கள் தென் கொரியாவில் தொழில்களுக்காக சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக வெளிநாட்டு தொழில்களுக்கான இலங்கையர்களின் கோரிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.