60 வீத இலங்கையர்கள் புலம்பெயர விருப்பம்! ஆய்வில் வெளியான தகவல்
60 வீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு நாட்டிற்கு இடம்பெயர்வது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பான்மையான இலங்கையர்கள் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, முக்கியமாக ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு இடம்பெயர விரும்புகின்றனர்.
நாட்டின் கடன் தொடர்பாக பெரும்பாலான இலங்கையர்கள் (37%) பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனா இலங்கைக்கு உதவும் என நம்புகின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,