பிரியந்தவிற்காக பகிரங்க மன்னிப்புக்கோரிய பாகிஸ்தான்! அதே பண்பாடு இலங்கைக்கு உண்டா? நாடாளுமன்றத்தில் சிறீதரன் கேள்வி
அண்மையில் பாகிஸ்தானில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“அண்மையில் பாகிஸ்தானில் வைத்து இலங்கையரான பிரியந்த குமார மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நேரத்தில் அவருக்கும் அவரது குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த சம்பவம் போல் இலங்கையிலும் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த ரமேஷ் மெல்ல மெல்ல வெட்டிக்கொல்லப்பட்டார். இது குறித்த படங்களும் வெளியாகியிருந்தன.
இசைப்பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்களும் அந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டதையும், அது குறித்த படங்களும் வெளியாகியிருந்தன. பிரியந்தவின் மரணத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மன்னிப்பு கோரியிருந்தார்.
எனினும், இலங்கையில் இவ்வளவு மரணங்கள் ஏற்பட்டும் மன்னிப்பு கோரும் அந்த பண்பாடு இல்லையென” அவர் கூறியுள்ளார்.