கனடா செல்ல முயற்சித்து இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்
சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் 38 பேர் தொடர்பில் இந்தியாவின் விசாரணை எஜன்ஸி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மங்களூர் பொலிஸார் தமிழ் நாடு பொலிஸாருடன் இணைந்து கடந்த மாதத்தில் இந்த இலங்கையர்களை கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல தயாராக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
ஒரு நபர் இலங்கை பெறுமதியில் 10 லட்சம் ரூபாய் என்ற கணக்கில் வழங்கி கனடா செல்ல முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மங்களூர் நபர பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இந்த இலங்கையர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைக்காக இந்திய விசாரணை எஜன்ஸியடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நபர்கள் கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையில் இருந்து கடல் வழியான இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாகவும் கனடாவிற்கு செல்ல தயாராகிய போது கைது செய்யப்பட்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam