பெலாரஸில் சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்களில் இலங்கையர்களும் உள்ளடக்கம்: வெளிநாட்டு ஊடகம் தகவல்
பெலாரஸில் இருந்து போலந்துக்கு கடந்த சனிக்கிழமை அன்று சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த போது பிடிபட்டவர்களில் 160 பேரில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கையர்கள் உட்பட்ட 160 பேர் நேற்று (13.08.2023) போலந்திற்குள் செல்ல முயன்றதாக எல்லை அதிகாரிகளை மேற்கோள் காட்டி போலந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டவிரோத எல்லைக் கடப்பு
இந்தநிலையில், இந்த முயற்சிக்கு உதவியதாக கூறி நான்கு சிரிய மற்றும் மூன்று பங்களாதேஷ் மற்றும் மூன்று யுக்ரைனியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதன்படி சட்டவிரோத எல்லைக் கடப்புகளுக்கு உதவியதற்காக இந்த ஆண்டு ஏற்கனவே 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆண்டு முழுவதும், 16,000 இருந்து 19,000 பேர் வரை சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 19 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
