ஐரோப்பா அனுப்புவதாக இலங்கையர்களை ஏமாற்றிய முகவர் தப்பியோட்டம்: அதிரடியில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகள்
ஐரோப்பா நாடொன்றுக்கு அனுப்புவதாக பெருமளவு இலங்கையர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
ருமேனியாவில் வேலை வாய்ப்பை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட முகவர் நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பிலுள்ள குறித்த முகவர் நிலையம் பாதிக்கப்பட்ட பெருமளவு இளைஞர், யுவதிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
பண மோசடி
வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக 128 இளைஞர், யுவதிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவர்களிடம் 7 முதல் 10 இலட்சம் ரூபா வரை பணம் பெறப்பட்டுள்ளது.
எனினும் உரிய காலத்திற்குள் ருமேனியாவுக்கு அனுப்பாத நிலையில், பணம் பெற்ற முகவர் தப்பியோடியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், யுவதிகள் முகவரின் அலுவலத்தை நேற்று சுற்றிவளைத்தனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணம் பெறப்பட்ட அனைவருக்கும் இன்றையதினம் நேர்முக பரீட்சை இருப்பதாக ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பலர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |