வெளிநாட்டிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் உயிரிழந்த பெண்
வெளிநாட்டிலிருந்து இலங்கை நோக்கி பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை பயணித்த விமானத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
49 வயதான மெனிக் அப்புலகே மங்களிகா என்ற 49 பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டுப் பணிப்பெண்
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த இலங்கைப் பெண்ணாக இருக்கலாம் என மரணம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரியாத்தில் இருந்து இன்று காலை 06.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த UL-266 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
இறந்த பெண் பற்றிய மேலதிக தகவல்களைக் கண்டறிய கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விமான நிலையத்தில் இருந்து சடலம் நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
