ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை பெண் - கணவன் அதிரடியாக கைது
இத்தாலியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில், கணவன் தனது மனைவியை கண்ணாடிப் போத்தலால் தலையில் பலமுறை தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் அவர்களின் 12 வயது மகனின் கண் முன்னே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண் மீது தாக்குதல்
இத்தாக்குதலில் படுகாயமடைந்த 38 வயதுடைய இலங்கை பெண், உடனடியாகமருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மண்டையோட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர் தற்போது ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதாரண விடயம் தம்பதிக்கு இடையில் பெரும் வன்முறையாக மாறியுள்ளது.
இதன்போது, 41 வயதுடைய இத்தாலிய நாட்டவரான கணவன், கண்ணாடிப் போத்தலை எடுத்து மனைவியின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
கணவன் கைது
இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த சிறுவன், தற்காலிகமாக அவனது பாட்டியின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரோம் நகர பொலிஸார், அடுக்குமாடி வீட்டிற்குள்ளேயே வைத்து தாக்குதல் நடத்திய கணவனைக் கைது செய்தனர்.
கொலை முயற்சி மற்றும் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.