அவுஸ்திரேலியாவில் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண்! வெளியான தகவல்
அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த 44 வயதுடைய இலங்கை பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயான மெலோனி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு கணவனால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மெல்பேர்னில் வசிக்கும் இலங்கை பெண் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மகள் பக்கத்து வீட்டாருக்குத் தெரிவித்த சீ.சீ.டி.வி காட்சிகள் கமராக்களில் பதிவாகியுள்ளது.
இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்
உயிரிழந்தவரின் மகள் தங்களிடம் வந்து, "என் அம்மா இறந்துவிட்டார், என் அம்மா இறந்துவிட்டார்" என்று கூறியதாக அயலவர்கள் அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் 44 வயதான மெலோனி பெரேரா என்ற பெண் அவரது கணவர் தினுஷ் குரேரா (45) என்பவரால் கொல்லப்பட்டுள்ளார். இரவு வேளையில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஊடகச் செய்திகளின்படி, தம்பதியரின் மகனும் கத்திக்குத்து சம்பவத்தில் பலத்த காயங்களுடன் தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தம்பதியினர் சமீபத்தில் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், உயிரிழந்த பெண் சமீபத்தில் வீட்டின் சாவியை மாற்றியுள்ளார் என்றும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் தப்பியோட முயற்சித்த நிலையில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும் சட்ட நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
