இந்திய வாக்காளர் அடையாள அட்டை பெற்ற முதல் இலங்கை பெண்
இந்திய பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அடையாள அட்டையை இந்தியாவில் பிறந்த இலங்கை பெண்ணொருவர் முதன்முறையாக பெற்றுள்ளார்.
திருச்சியில் - கோட்டைப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 38 வயதான நளினி கிருபாகரன் என்பவருக்கே இவ்வாறு இந்திய வாக்குரிமை கிடைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நளினி, 1986ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார்.
இந்திய கடவுச்சீட்டு
குடியுரிமை இல்லாத நிலையில், அதனைப் பெற்ற கோட்டப்பட்டு முகாமின் முதல் அகதியாக வாக்களிக்கும் உரிமையைப் பெற வேண்டும் என 2021இல் தீர்மானித்துள்ளார்.
இதன்போது, இந்திய கடவுச்சீட்டுக்காக அவர் முன்வைத்த விண்ணப்பமானது பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது.
எனினும், 2022 ஆகஸ்ட் 12 அன்று சென்னை மேல் நீதிமன்றத்தினால் நளினியின் பிறப்பு மண்டபத்தில் என்பதைக் கருத்திற் கொண்டு, அவருக்கு இந்திய கடவுச்சீட்டை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
குறிப்பாக, 1950 ஜனவரி 26 மற்றும் 1987 ஜூலை 1இற்கு இடையில் இந்தியாவில் பிறந்த ஒருவர் குடியுரிமைச் சட்டம், 1995இன் பிரிவு 3இன் படி, பிறப்பால் குடிமகன் ஆவார் என்பதனடிப்படையில் அவருக்கு இந்த வாய்ப்பினை நீதிமன்றம் வழங்கியது.
இந்திய குடியுரிமை
இதற்கமைய, அவர் தனது கடவுச்சீட்டை பெற்றதுடன் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன் மறுவாழ்வு முகாமில் தொடர்ந்து வசிக்கிறார்.
இது தொடர்பில் நளினி கூறுகையில், "இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளேன். முகாமில் உள்ள மற்ற அகதிகள் அனைவரும் அதே உரிமைகளை அனுபவிக்க வேண்டும்.
பல தசாப்தங்களாக மாநிலம் முழுவதும் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை உறுதி செய்யும் கட்சிக்கு நான் வாக்களிப்பேன்.
தற்போது, இந்தியாவில் பிறந்த எனது இரண்டு குழந்தைகளுக்கு குடியுரிமையைப் பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிக்கும் உரிமை
இதற்கிடையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான ஸ்டெல்லா மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இதேபோன்ற சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது அகதி குறிச்சொல்லைத் துறக்க, தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் நாடாளுமன்றத்தில் போராட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோன்று, இரண்டு தசாப்தங்களாக முகாமில் வசிக்கும் கலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வாக்களிக்கும் உரிமையை கோரியுள்ளார்.
இதேவேளை, மாநிலம் முழுவதும் இதேபோன்ற முகாம்களில் 58,457 அகதிகள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |