உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்! இலங்கை பெண்ணின் சடலம் மீட்பு
புதிய இணைப்பு
துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போன இலங்கை பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
துருக்கிக்கான இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த பெண்ணின் சடலத்தை அவர் மகள் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண், கலகெதர பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இருபது வருடங்களுக்கு முன்னர் அவர் துருக்கி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போன இலங்கை பெண்ணை தேடும் பணிகள் தொடர்கின்றன.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகளின் பின்னர் காணாமல் போயுள்ள இலங்கை பெண் தங்கியிருந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்திரிக்கா ராஜபக்ச என்ற குறித்த பெண் தங்கியிருந்த இடம் நில அதிர்வால் சேதமடைந்துள்ளதுடன் அவர் இதுவரையில் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
அந்த இடத்துக்கு அவரது மகளும் சென்றுள்ளதாக துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வால் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 22 மணி நேரம் முன்

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
