சிங்கப்பூரில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்! விசாரணையில் வெளியான தகவல்
சிங்கப்பூரில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
தங்கொடுவ - மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நதிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் சிங்கப்பூருக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர்களிடம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான காணொளி
இது குறித்து உயிரிழந்த பெண் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.
குறித்த பெண் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து பாய்ந்த காணொளியொன்றும் வெளியாகியுள்ளதுடன், இது விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் தான் பணிபுரிந்த வீட்டில் உள்ளவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும், இதன் காரணமாக இலங்கை செல்ல விரும்புவதாகவும் தனது தோழிக்கு வாட்ஸ்அப்பில் குரல் பதிவொன்றை அனுப்பியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நதிகாவின் மரணத்தை தற்கொலையாக ஏற்க மாட்டோம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து சிங்கப்பூரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இவரது மரணம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
