ஓமானில் இலங்கை பெண் மரணம்
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
கல்கமுவயை சேர்ந்த 55 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஓமனுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற நிலையில் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டிற்கு விரைவில் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
