பிரான்ஸில் புகலிடம் கோரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் வெளியான தகவல்
பிரான்ஸில் 2025ஆம் ஆண்டில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களில் இலங்கையர்களின் கோரிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டில் பிரான்ஸில் தஞ்சம் கோரியவர்களில் கொங்கோ மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களே அதிகளவில் புகலிடம் கோரியுள்ளனர்.
புகலிடம் கோருவோர் பட்டியலில் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் காரணங்களால், பல இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதை ஒரு வழியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பிரான்ஸில் புகலிடம் கோரும் தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்களின் விண்ணப்பங்கள் நீண்டகாலமாகவே பிரான்ஸ் குடிவரவு திணைக்களத்தால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
2025ஆம் ஆண்டு பெறப்பட்ட ஒட்டுமொத்த புகலிட விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், பிரான்ஸ் அரசு குடியேற்ற விதிகளை மேலும் கடுமையாக்கத் திட்டமிட்டுள்ளது. போலி ஆவணங்கள் மற்றும் தகுதியற்ற காரணங்களை முன்வைத்து புகலிடம் கோருபவர்களின் விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு விண்ணப்பங்கள் மிகத் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan