சோமாலிய கடற்கரைக்கு அப்பால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையரும் உள்ளதாக தகவல்
சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் தாங்கிக் கப்பலின் ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சோமாலிய கடற்கரைக்கு அப்பால் 17 பேருடன் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர் ஒருவரும், 10 பாகிஸ்தானியர்கள், நான்கு இந்தோனேசியர்கள், ஒரு இந்தியர் மற்றும் மியான்மார் நாட்டு பிரஜை ஒருவரும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக தேர்தலை தீர்மானிக்கும் இரு முக்கிய புள்ளிகளில் கடும் இழுபறி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள முடிவு
ஆயுததாரிகளால் கடத்தல்
18,500 பீப்பாய் எரிபொருளை ஏற்றிச் சென்ற குறித்த கப்பல், கடந்த புதன்கிழமை இரவு சோமாலியக் கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளது.

தற்போது கப்பலும், 17 ஊழியர்களும் கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் சோமாலிய கடற்கரைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், சோமாலிய அதிகாரிகள் அல்லது சோமாலியக் கடல் பரப்பில் கடற்கொள்ளை ஒழிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஐரோப்பிய கடற்படை இது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என கூறப்படுகின்றது.
ஹோர்முஸ் நீரிணையில் அதிரடி தாக்குதல்! இருபுறமும் முகாமிட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan