மலையக மக்களுக்கான காணி அனுமதி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
தோட்ட மக்கள் பரம்பரையாக அனுபவித்து வந்த காணிகளில் வீடுகளை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என நுவரெலியா மாவட்ட
கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சுமார் 100 முதல் 200 ஆண்டுகளாகத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் பரம்பரையாக விவசாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வந்த காணிகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தீர்வு வேண்டும்
குறித்த காணிகளுக்கு முறையான உறுதிப் பத்திரங்கள் இல்லாத போதிலும், பல தலைமுறைகளாக மக்கள் அவற்றில் விவசாயம் செய்து தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு மக்கள் நீண்டகாலமாக அனுபவித்து வந்த காணிகளில் வீடுகளை அமைக்க முற்படும்போது, தோட்ட நிர்வாகங்கள் தலையிட்டு அதனைத் தடுக்க முயற்சிப்பதன் காரணமாகவே பல்வேறு பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஹட்டன் பிரகடனத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மலையக மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, மலையக மக்கள் பரம்பரையாக அனுபவித்து வந்த காணிகளில் வீடுகளை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்குவதற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மேலும் வலியுறுத்தினார்.