இலங்கை முன்னணி தொலைக்காட்சிக்கு சர்வதேச நிறுவனத்தின் எச்சரிக்கை..!
இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு சர்வதேச நிறுவனம் ஒன்று சட்ட நடவடிக்கை ஒன்றை எடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
சோனி இன்டர்நேஷனல் நிறுவனம், அதன் அறிவுசார் சொத்துரிமையை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தி வைக்கக் கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அறிவுசார் சொத்துரிமை மீறல்
இலங்கையிலுள்ள குறித்த தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு நேற்று (19.112025) கிடைத்ததாகக் கூறப்படும் அறிவிப்பின்படி, சோனி இன்டர்நேஷனல் ஒளிபரப்பாளருக்கு, அது அதன் அறிவுசார் சொத்துரிமை சட்டத்திட்டங்களை மீறியுள்ளதாகவும், நிகழ்ச்சியின் தயாரிப்பு மற்றும் ஒளிபரப்பை உடன் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை நிறைவேற்றத் தவறினால், IP மீறல் என்று கூறப்படுவதால் ஏற்படும் சேதங்களுக்கான கோரிக்கைகள் உட்பட, மேலும் அறிவிப்பு இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிறுவனம் மேலும் எச்சரித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |