ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முயற்சித்த இலங்கையர்களின் பரிதாப நிலை
அஸர்பைஜான் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட 7 பேரையும், கடத்தலுக்கு தலைமை தாங்கிய கஹதுடுவ பகுதியிலுள்ள வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரையும் கைது செய்ததாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஸர்பைஜான் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறு கஹதுடுவ பிரகதி மாவத்தை பகுதியிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, விமான நிலையத்திற்குச் சென்ற போது விசா இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பியதாக வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த மோசடி நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் செல்வதற்காக தான் 8 லட்சம் ரூபாயை வேலைவாய்ப்பு முகவருக்கு கொடுத்ததாக குறித்த நபர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இவருடன் மேலும் 6 பேர் விமான நிலையத்திற்கு சென்ற போதிலும் அவர்களும் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த நபர் செய்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் மேலும் 6 பேர் பொலிஸ் நிலையத்திற்கு தாம் கஹதுடுவ ள வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு 62 லட்சம் ரூபாய் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த போதும், வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளரால் தாம் விமான நிலையத்திற்குள் மாத்திரம் அழைத்துச் செல்லப்பட்டதாக முறைப்பாட்டாளர்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
