தாய்லாந்தில் இலங்கையரிடம் 5500 டொலர் பணத்தை கொள்ளையிட்ட பெண் கைது
தாய்லாந்தில் இலங்கை சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்த 5500 அமெரிக்க டொலர் பணத்தை கொள்ளையிட்ட பெண் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தின் பங்கோக்கின் ஹுவாய் காஹாவங் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
30 வயதான இலங்கை சுற்றுலாப் பயணி ஹோட்டல் ஒன்றில் மது அருந்திக்கொண்டிருந்த போது இந்த பெண் அறிமுகமாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சுற்றுலாப் பயணி குறித்த பெண்ணை தனது அறையில் தங்குமாறு அழைத்துள்ளார்.
விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்
காலையில் நித்திரை விழித்த போது, அறையில் இருந்த 5500 டொலர் பணத்தை காணவில்லை என இலங்கையர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் பணத்தை களவாடியமைக்கான ஆதாரங்களையும் பொலிஸார் திரட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.