சேலைக்கு பதிலாக வேறு ஆடை அணிந்து பாடசாலை சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி
கடந்த வாரம் சில பாடசாலைகளின் ஆசிரியைகள் சேலைக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்தமை தொடர்பான புகைப்படங்கள் சமூவளைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சேலை அணிவதற்கு அதிக செலவாவதன் காரணமாக இவ்வாறு வேறு உடைகள் அணிவதாக இலகு ஆடைகள் அணிந்தவாறு தமது புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியிருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்ததுடன்,சட்டம் மற்றும் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி , பாடசாலைக்கு சேலை இன்றி வேறு ஆடைகளை அணிந்து சென்றதோடு மாத்திரமின்றி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஆசிரியரின் சமூகவலைத்தள பதிவு
இந்நிலையில், இவ்வாறு சேலை இன்றி வேறு ஆடை அணிந்து பாடசாலைக்கு சென்ற ஆசிரியர் திலினி ஷால்வின் இந்த சம்பவத்தினை தொடர்ந்து தான் எதிர்நோக்கிய சமூகத்தின் எதிர்வினைகள் குறித்து அவர் தனது சமூக வலைத்தள கணக்குகளில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
இந்த ஆடை விவகாரத்தினை தொடர்ந்து சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாடசாலைக்கு வர தயாரான போது, என் தொலைப்பேசியை பார்த்தேன்.என்னை குறிப்பிட்டு தவறான பதிவொன்று அனுப்பப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை உண்மையாகவே புரிந்து கொண்டு எனது பலத்தை அறிந்தவர் என்பதால் அவருக்கு விசித்திரமாகச் சொல்ல ஒன்றுமில்லை. பலர் என்னை கண்ட உடனே சில கதைகளை கதைக்கின்றனர்.
கடையொன்றிற்கு சென்றேன்.மறுபுறம் இளைஞரொருவர் என்னை கண்டதும் காணொளி எடுக்கவும் முற்பட்டார்.பின்னர் கணவரின் முயற்சியினால் தடுக்கப்பட்டது.
எனவே மக்கள் சுதந்திரமாகச் சிந்திக்க இலங்கை இன்னும் பொருத்தமான நாடாக மாறவில்லை.குறிப்பாக, சுதந்திரமாகப் பேசும் பெண்ணைக் கண்டால் சிலரின் வார்த்தைகள் உடைந்து விடும் மனநிலையிலிருந்து விடுபட சில காலம் பிடிக்கும்.
என் குழந்தை வளர்ந்து பெரியவனாவதற்குள், இந்த சமுதாயத்தை இன்று இருப்பதை விட சிறந்த இடமாக மாற்ற என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்வேன். அப்போது தான் அவன் சுதந்திரமான மனிதனாகத் தலை நிமிர முடியும்.
இந்த சமூக எழுச்சிக்காக என் மீதான அவதூறுகளினால் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த நாளைக் கட்டியெழுப்பினால்... அதுவே போதும் என்றும் பதிவிட்டுள்ளார்.