இந்தியா கேட்காமல் சுமந்திரன் கூறிய தகவலால் பெரும் இராஜதந்திர நெருக்கடி
அண்மையில் இந்திய தூதுவர் யாழ்ப்பாணம் சென்று தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்த போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சீனா இலங்கையில் இருப்பது எமக்கு விருப்பம் இல்லை என்று என்று குறிப்பிட்டார் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாமல் நாங்கள் சீனாவுடன் உறவுகளைப் பேணுவோம் என்று அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இதையேத்தான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல் என்றால் அது உங்களுடைய நிலை, அதை எம்மிடத்தில் கொண்டு வந்து புகுத்துவது பொறுத்தமற்றது.
நாங்கள் ஒரு இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாடுகள் தொடர்பிலும் நாங்கள் தனித்து முடிவு எடுப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதிலிருந்து, சிங்கள அரசியல் தலைவர்களின் இராஜதந்திரத்தையும், தமிழ் அரசியல் தலைவர்களின் அறிவுத் திறனையும் பார்க்கலாம் என்றும் கலாநிதி அரூஸ் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |