சர்வதேசத்திடம் நீதி கோரும் பாதிக்கப்பட்ட வடகிழக்கு உறவுகள்
வடக்கு - கிழக்கு தமிழர் தாயகங்களில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அரசியல் தீர்வின்றிய நிரந்தரமான நிலையில் பின்வாங்கும் நிலை தொடர்கின்றது.
குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முன்னிருத்தியும் வலியுறுத்தியும் வருகின்ற நிலையில் நீதி இல்லாமல் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாக வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுழற்சி முறையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் வலியுறுத்தியபடி: “இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகிறோம்.”
நீண்டகால கோரிக்கை
இந்த கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் 25.09.2025 முதல் இடம்பெற்று வந்த தொடர் சுழற்சி முறையிலான உண்ணா விரதப் போராட்டம் ஒக்டோபர் 01 வரையும் இடம் பெற்றதுடன் கிழக்கு மாகாணத்தின் திருக்கோவில் பகுதியில் இடம் பெற்றது. இதில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
வடக்கில் செம்மணி பகுதியில் இறுதி நாளன்று குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது நம்பிக்கையிழந்த காணாமல் போன உறவுகளை நினைத்து உள்ளகப் பொறி முறையை வலியுறுத்தி தீப் பந்தப் போராட்டத்தையும் முன்னெடுத்த நிலையில் ஐக்கிய நாட்டு இலங்கை தொடர்பான அறிக்கையும் தீயிட்டு எரிக்கப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரங்களுக்காக நீதி வேண்டியும் உள்நாட்டு பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரனையை வலியுறுத்தியும் செம்மணி மனித புதை குழிக்கு நீதி வேண்டியும் மேலும் குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஒக்டோபர் 01 சர்வதேச சிறுவர் தினத்திலும் இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கான நீதியை நிலை நாட்ட கோரியும் கோசங்களை எழுப்பினர். கிழக்கில் அதே நாளில் கறுப்பு பட்டி அணிந்து சிறுவர் தினத்தை போராட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
இதன் போது ஐக்கிய நாட்டுக்கு குறித்த மனு அடங்கிய அறிக்கையொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் திருகோணமலை மாவட்ட சங்க தலைவி செபஸ்டியன் தேவி தெரிவிக்கையில் " எங்கள் உறவுகளுக்காக இந்த நாளில் தொடராக உணவு தவிர்ப்பு போராட்டத்தை கடந்த ஐந்து நாட்களாக முன்னெடுத்தோம். எங்கள் பிள்ளைகளும் யாழ். செம்மணி புதை குழி அகழ்வின் போதான மனித எச்சக்களில் இருப்பார்களாக என்ற சந்தேகம் உள்ளது.
சர்வதேச நீதி
சர்வதேசம் தான் நீதியை பெற்றுத்தர வேண்டும் உள்நாட்டு பொறிமுறையை நம்ப முடியாது. சர்வதேச நிபுணர் குழுவின் ஊடாக செம்மணி புதை குழி தொடர்பில் ஆராய வேண்டும். எந்த ஜனாதிபதி வந்தாலும் எங்களுக்கு தீர்வு இல்லை. தொடராக போராடி வருகிறோம். கடந்த கால அரசாங்கம் போன்றே இந்த அரசாங்கமும் உள்ளது. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலையில் நாடு உள்ளது.
மே மாதமளவில் ஐ.நாடு மனித உரிமைகள் ஆணையாளர் வடகிழக்குக்கு விஜயம் செய்தார்.செம்மணி மனித புதை குழிக்கு சென்று பார்வையிட்டு மக்கள் போராட்டத்தையும் போராடிய போது வருகின்ற கண்ணீர் துளிகளையும் பார்வையிட்டார் ஆனால் அரசாங்கத்துக்கு ஆதரவான பதிலையும் எங்களுக்கு பாதகமான பதிலையும் தந்தது மன வேதனையளிக்கிறது.
சர்வதேசத்திடம் 17 வருடங்களாக நீதி கோரி வருகிறோம். சர்வதேசம் நீதியை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கு நீதி வேண்டும். அரசாங்கம் காலத்தை வீணடித்து செல்கிறது. உள்நாட்டு பொறி முறையை நிராகரிக்கிறோம். சர்வதேசம் எங்களுக்கு நீதியை தர வேண்டும். காணாமல் போன உறவுகளுக்காக எங்கள் பிள்ளைகளுக்கான நீதி கிடைக்க வேண்டும் இதற்காக போராடி போராடி வயது செல்கிறது.
எங்களில் 350க்கும் மேற்பட்ட தாய்மார்கள் இறந்துள்ளார்கள் இனி நாங்களும் இறந்து விடுவோம் என்கின்ற நிலை உள்ளது எனவே தான் இறப்பதற்கு முன்னர் எம் உறவுகளுக்காக நீதியை வலியுறுத்துங்கள் என சர்வதேசத்திடம் கேட்டு நிற்கின்றோம்" என ஆழ்ந்த மன வேதனையுடன் இக் கருத்தினை பதிவு செய்திருந்தார். ஐக்கிய நாட்டின் தற்போதைய கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் சார்பில் வெளி விவகார அமைச்சர் தலைமையிலான குழுவும் அங்கு சென்றுள்ளனர்.
உணவு தவிர்ப்பு போராட்டம்
ஆனால் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் உள்ளகப் பொறி முறை ஊடாக தீர்வை வழங்குவோம் என வெளி விவகார அமைச்சர் அங்கு தெரிவித்திருப்பதை ஒரு போது ஏற்க முடியாது என வடகிழக்கு காணாமல் போன உறவுகள் உட்பட பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட சமூகம் உணவு தவிர்ப்பு போராட்டத்தை வடகிழக்கில் கடந்த வாரம் ஆரம்பித்து முடிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து திருகோணமலையை சேர்ந்த மனித உரிமைகள் சிவில் செயற்பாட்டாளர் கோகிலா வதனி தெரிவிக்கையில் " இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் அது தொடர்பான சங்கங்களும் தொடர்ந்தும் ஒவ்வொரு வருடமும் ஆடஸ்ட் 30ல் பாரியளவிலான போராட்டங்களை வடகிழக்கில் முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த நிலையில் தங்களுக்கான நீதி வேண்டி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தொடர்கின்றது ஆனால் உறவுகளை தேடி தேடி களைத்துப் போயுள்ளனர். கடந்த கால அரசாங்கம் போன்றே அநுர குமார அரசாங்கமும் நீதியை பெற்றுத் தராதா என பாதிக்கப்பட்ட உறவுகள் நினைக்கின்றனர். மனைவி ,பிள்ளைகள் என பல உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.
இந்த நிலையில் ஐக்கிய நாட்டு சபையில் மனித உரிமைகள் தொடர்பான இலங்கை விவகாரம் தொடர்பில் அறிக்கை அவ்வளவு ஆரோக்கியமானதாக தெரியவில்லை இதனால் இலங்கை அரசாங்கம் மீது நம்பிக்கையிழந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார். இலங்கை மீதான நம்பிக்கையிழந்த மக்கள் உள்நாட்டு பொறி முறையை இரத்துச் செய்யும் நிலைக்குள் உள்ளனர். எனவே தான் சர்வதேசம் தான் நீதியை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.






பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 07 October, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.





மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
