இராணுவத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பு! மகிந்த அணியின் நம்பிக்கை
வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் இருப்பதால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்தின் கம்பீரம் இல்லாமல் போயுள்ளது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சுதந்திரம் என்பது அபிமானம். அதன் கம்பீரத்தன்மையைக் குறைமதிப்புக்கு உட்படுத்தக்கூடாது. உலகில் எந்தவொரு நாடும் அவ்வாறு செய்யாது. ஆனால், இலங்கையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் சுதந்திரத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது.
செலவுகளைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் அபிமானம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. படையினரின் வீரதீரச் செயல்கள் பற்றி பேசப்படவில்லை. நாட்டில் இன்று அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கறுப்புக்கொடி ஏற்றப்படுகின்றது. இதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் இருப்பதால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சில இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றையும் அகற்றினால் பொலிஸையும் அகற்றுமாறு கோருவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam