தமிழ் இனப்படுகொலையாளிகளை சர்வதேசம் உடன் கைது செய்ய வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் (Photos)
“அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியில் தமிழ் இனப்படுகொலையாளிகளை சர்வதேசம் உடன் கைது செய்ய வேண்டும்”என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோர் உறவினர்கள் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி செல்வராணி தலைமையில் இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதி கோரும் மக்கள்
இந்த போராட்டத்தில்,“சர்வதேசமே வீதியில் கண்ணீருடன் நாம்“, “தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட இலங்கை“, தமிழ் இனப்படுகொலையாளிகளான கோட்டாபயவையும், மகிந்தவையும் சர்வதேசமே கைது செய்“ மற்றும் “வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை முற்றாக நிறுத்த வேண்டும்” என காணாமல் ஆக்கபட்டோருக்கு நீதி கோரி கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.
இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







