எல்லா தமிழர்களையும் வெட்டுவேன்! இனவாதத்தை கக்கும் அம்பிட்டிய தேரர்(Video)

Ampitiye Sumanarathana Thero
By Kumar Oct 25, 2023 12:53 PM GMT
Report

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதிக்கு இன்று மாலை சென்ற  அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமிழர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை எச்சரிக்கும் வகையில் கடும் தொனியில் கத்தி கூச்சலிட்டதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.     

யாழிலிருந்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று திரும்பியவர் மாயம்

யாழிலிருந்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று திரும்பியவர் மாயம்

இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில் அங்குவந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதற்கு எதிராக கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை கொண்டு பேசினார்.

யுத்தத்தை தடுக்க முடியாது 

இதன்போது அப்பகுதிக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

எனினும், அம்பிட்டியே சுமன ரத்ன தேரர் கத்தி கூச்சலிட்டார்.

இதன்போது “பொலிஸார் இந்த வீதியை மூடினார்கள், பிரச்சினை ஏற்படுத்தினார்கள், இறுதியில் எமக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்தனர். இவர்களின் இந்த செயற்பாடு சரியானதா.

எல்லா தமிழர்களையும் வெட்டுவேன்! இனவாதத்தை கக்கும் அம்பிட்டிய தேரர்(Video) | Sri Lankan Tamils Ambittiya Sumanarathana Tero

இவ்வாறு செய்ய வேண்டாம். நாம் உதவியற்றவர்கள். இனம் என்ற ரீதியில், இங்கு இடம்பெறும் குற்றங்களைத் தடுக்க வேண்டும்.

நாட்டில் இனவாதம் இல்லை, மதவாதமும் இல்லை. இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் மிகவும் அமைதியாக வாழ்கின்றனர். சாணக்கியன் மற்றும் இங்குள்ள அதிகாரிகள் மேற்கொள்ளும் கீழ்த்தரமான நடவடிக்கைகளால் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும். அவ்வாறு யுத்தம் ஏற்படுவதை தடுக்க முடியாது” என்று அம்பிட்டிய தேரர் கடும் தொனியில் கத்திய கூச்சலிட்டமை அந்தப் பகுதியில் பதற்றமான நிலையை தோற்றுவித்திருந்தது.  


குறித்த பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பாக குறித்த கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்ட நிலையில் அவற்றினை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மாநகரசபை ஆணையாளர் சுமனரத்ன தேரரிடம் நேற்று தெரிவித்திருந்தாகவும் எனினும் அவர் இன்று அங்கு சென்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

சம்பந்தன் எம்.பி பதவியைத் துறக்க வேண்டும்! அடுத்து வரும் காலத்தில் நடவடிக்கை: சுமந்திரன் பகிரங்கம்

சம்பந்தன் எம்.பி பதவியைத் துறக்க வேண்டும்! அடுத்து வரும் காலத்தில் நடவடிக்கை: சுமந்திரன் பகிரங்கம்

குறித்த கட்டிட இடிபாடுகளை அகற்றி அப்பகுதியை தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இரண்டு முச்சக்கர வண்டிகளில் வந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் அவருடைய சகாக்களும் அங்கிருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததுடன் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 

இலங்கைக்கு கடன் வழங்கிய அனைவரையும் சமமாக நடத்தவேண்டும்: அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கு கடன் வழங்கிய அனைவரையும் சமமாக நடத்தவேண்டும்: அமெரிக்க தூதுவர்

GalleryGalleryGalleryGalleryGallery
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US