இந்தியாவில் இலங்கை தமிழர் ஒருவர் செய்த தவறான செயல் அம்பலம்
போலி இந்தியக் கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயன்ற இலங்கைத் தமிழர் ஒருவர் சென்னை - வளசரவாக்கம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை கடந்த (02.05.2023) அன்று முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை- வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்த ரொபின்சன் சார்லஸ் (43) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்கள்
தகவல் ஒன்றின் அடிப்படையில் தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸார் விசா காலம் முடிந்த பிறகும், சார்லஸ் இந்தியாவில் தங்கியிருப்பதைக் கண்காணித்துள்ளனர்.
இதனையடுத்து, அவரது வீட்டை பொலிஸார் சோதனை செய்தபோது, போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டைப் பெறுவதற்கான போலி பெயர் மற்றும் முகவரியில் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இந்தநிலையில், போலி ஆவணங்கள் தயாரித்து அதிக காலம் தங்கியிருந்ததாகக் குற்றம்
சுமத்தி, சார்லஸை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
