லண்டனில் பண மோசடியில் கைதான இலங்கைத் தமிழர் : செய்திகளின் தொகுப்பு
பிரித்தானியாவில் இலங்கை தமிழர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனத்தில், முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மக்களை மோசடி செய்த கும்பலுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் மேலும் தெரியவருகையில்,, குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழருடன் , டேரன் பெக் மற்றும் டெனிஸ் டீகன் ஆகிய மூவரும் Choice Option சார்பாக 'தரகர்களாக' செயல்பட்டனர், பின்னர், அந்த நிதி நிறுவனத்தில் நிர்வகிக்கப்பட்ட கணக்குத் திட்டத்தில் முதலீடு செய்ய பொதுமக்களை வற்புறுத்துவதற்கு அவர்களைத் தூண்டினர்.
குறித்த நிதி நிறுவனமானது வித்தியாசமான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த திட்டமானது 35 வயதுடைய இலங்கையர் தலைமையில் செயல்பட்டுள்ளது. இவருடன் Darren Peck(43), மற்றும் Denis Deegan(49) என்பவர்களும் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மக்களின் பணத்தை அவர்கள் மூவரும் மோசடி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில், 2024 ஜனவரி 19ம் திகதி சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றம் இலங்கை தமிழர் உட்பட மூவரும் குற்றவாளிகள் என உறுதி செய்துள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |