தமிழ்க் கட்சிகளுக்கு ரணில் விடுத்துள்ள அழைப்பு
தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நிற்காமல் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிக்கவும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வு குறித்தோ நாட்டின் அபிவிருத்தி குறித்தோ கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம். அவை காலத்தைத் தாமதிக்குமே தவிர வேறு பயனில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு
அவர் மேலும் தெரிவிக்கையில்,வெளிநாட்டுப் (பிரிட்டன், பிரான்ஸ்) பயணத்தின் போது சர்வதேச தலைவர்களையும், புலம்பெயர் மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினேன்.
இதன்போது, தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல், எதிர்கால இலங்கையை வடிவமைத்தல் போன்ற விடயங்கள் குறித்து எனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினேன்.
தமிழ்க் கட்சிகள்
அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியாக வேண்டும்.
முக்கியமாக தமிழ்க் கட்சிகள் தனித் தனியாக நிற்காமல் ஒன்றிணைந்து எம்முடன் பயணிக்க வேண்டும்.
இந்த விடயங்களில் அரசியல் கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம்.
இதனால், அரசியல் தீர்வு முயற்சியும் நாட்டின் அபிவிருத்தியுமே காலதாமதமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
