கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் நாடாளுமன்ற உறப்பினர்கள் ஒத்துழைப்பார்கள்: டக்ளஸ் நம்பிக்கை(Photos)
தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லையென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(27.09.2023) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவரான வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் சமாசப் பிரதிநிதிகளினால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையிடலயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ''இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் தமிழக கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்தும், செயற்பாட்டை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும், அவர்களை கைது செய்யும் செயற்பாட்டில் கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்.
கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த, கடந்த 20 வருட காலமாக தன்னால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் குறித்த அத்துமீறலை கட்டுப்படுத்துவதற்காக பல பேச்சுவார்த்தைகளை கச்சதீவு பகுதியில் ஏற்பாடு செய்ததிருந்தனர். அதில் நான் கலந்து கொண்டேன்.
ஆனால் எந்தவிதமான முடிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளோம்.
அதாவது, சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று இந்த விடயம் தொடர்பில் தமிழக தலைவர்களுடன் கலந்துரையாடி உண்மையான நிலைமையினை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
அதற்கு சக தமிழ் உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகின்றேன்.'' என தெரிவித்துள்ளார்.
you may like this











மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
