அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தகவல் தெரிவித்துள்ளது.
சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் நவம்பர் 20ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
புகலிடக்கோரிக்கையாளரின் விபரம்
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலிருந்து புகலிடம்கோரி அவுஸ்திரேலியா வந்த சாமி, நிரந்தர பாதுகாப்பு வீசாவிற்காக விண்ணப்பித்திருந்ததாகவும், இறுதிவரை அந்த வீசா கிடைக்காத நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சாமியின் மனைவியும்,மகளும் இலங்கையில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களைப் பார்த்துக்கொள்ளவென அவர் கடினமாக உழைத்ததாகவும், தனக்கான பாதுகாப்பு வீசா கிடைத்த பின்னர், அவர்களையும் அவுஸ்திரேலியா அழைப்பதற்கு அவர் விரும்பியதாகவும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, சாமியின் உடலை இலங்கைக்கு
அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
