உலக அளவில் சாதித்துள்ள இலங்கை மாணவர்கள்!
கடந்த 17ஆம் திகதி மே மாதம் U.K நாட்டில் ZOOM மூலம் உலகளாவிய ரீதியில் நடைபெற்ற International Oratory Festival போட்டியில் இம்முறையும் திருகோணமலை Green Tree English Academy மூலம் கலந்து கொண்ட மாணவர்கள் சாதித்துள்ளனர்.
குறித்த மாணவர்களில் செல்வன். தேவிசுதன் சொலமன் பிரைனோ (14) (Poetry Recital- Age 12-18) உலகளாவிய ரீதியில் 3ஆம் இடத்தைப் பெற்று Bronze Medal வென்றுள்ளார். செல்வி தீப்சிகா பிரபாகரன் மற்றும் செல்வன். தர்ஷன் ஆசேர் ஆஸ்டின் அவர்கள் Session Winners ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
2022 ஆண்டில் இருந்து நடைபெறுகின்ற இப்போட்டியில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பங்குபெற்று வருகின்ற Green Tree English Academy மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் தமது சாதனையை நிலைநிறுத்தி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மரிய ஜெயந்தா உமாசங்கர் அவர்களின் வழிகாட்டுதலில் குறித்த மாணவர்கள் போட்டியில் பங்குபற்றியுள்ளனர்.
இவர் உலகளாவிய ரீதியில் சிறந்த 100 ஆசிரியர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
