அதிவேக நெடுஞ்சாலை வாகனங்களின் உதிரிப்பாகங்கள் பரிசோதனை! புதிய சட்டம் அறிமுகம்
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகனங்களின் உதிரிப்பாகங்களை பரிசோதனை செய்வதற்கு தேவையான சட்டத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக் குழுவில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
தரமற்ற டயர்கள் அல்லது அத்தியாவசிய உதிரிப்பாகங்களில் கோளாறு இருக்கும் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டிகள் மற்றும் வான்கள் உட்பட தனியார் போக்குவரத்துத் துறையின் ஓட்டுநர்களுக்கான நல நிதியத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தொடர்புடைய மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



