இலங்கைக்கான நிதி திரட்டல்! ஐரோப்பாவில் பாரிய மோசடி செய்த இலங்கையர்
இலங்கையில் பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறி இத்தாலியில் நபர் ஒருவர் கிட்டத்தட்ட 6,500 யூரோக்கள் மோசடி செய்ததாக இத்தாலிய நன்கொடையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பொருட்களை பெற்றதாக காட்சிப்படுத்தப்பட்ட விலைப்பட்டியல்களை ஆராயும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களைக் கொண்ட உணவகங்கள் மற்றும் கடைகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும், பேரிடரால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
பணத்தை ஏமாற்றிய நபர்
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தங்கள் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுமாறு கேட்டு சில சமூக ஊடக ஆர்வலர்கள் விளம்பரங்களை வெளியிட்டிருந்தனர்.

அதற்கமைய இத்தாலியின் நேபிள்ஸில் வசிக்கும் சமூக ஊடக ஆர்வலர், போலி ஆவணங்கள் மற்றும் போலி விலைப்பட்டியல்களைசமர்ப்பித்து 6,500 யூரோக்களுக்கும் அதிகமான பணத்தை மோசடியாக மாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் போலியானவர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், இலங்கை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை நேரடியாக வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam