நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
புதிய இணைப்பு
நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 07ஆம் திகதியும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
20 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ள குறித்த பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் வழக்கம் போல நடைபெறும் என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


முதலாம் இணைப்பு
நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (05) மற்றும் நாளை(06) ஆகிய இரு தினங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
விடுமுறை..
மேலும், எதிர்வரும் 07ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam