இலங்கை வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சி
இலங்கை வர்த்தக வங்கிகளின் தரவுகளின் படி, நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(16.06.2023) இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்து, டொலரின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்திருந்த ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் சடுதியான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
வர்த்தக வங்களில் ரூபாவின் பெறுமதி
மக்கள் வங்கியில் - அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.31 ரூபாவில் இருந்து 301.69 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியானது 333.97 ரூபாவில் இருந்து 319.54 ரூபாவாக குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி - அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 305.60 ரூபாவில் இருந்து 296.92 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியானது 328 ரூபாவில் இருந்து 320 ரூபாவாக குறைந்துள்ளது.
சம்பத் வங்கி - அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 311.28 ரூபாவில் இருந்து 301 ரூபாவாக குறைந்துள்ளது. அத்துடன் விற்பனை பெறுமதியானது 328 ரூபாவில் இருந்து 318 ரூபாவாக குறைவடைந்துள்ளது.