370 இலிருந்து 280ஆக குறையும் ரூபாவின் பெறுமதி! ஜனாதிபதி அறிவிப்பு
கடந்த ஆண்டு டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 370 ஆக இருந்தது. இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 300 ஆக உள்ளது, எதிர்காலத்தில் அதை 280 ரூபாவாகக் குறைக்க எதிர்பார்க்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வலுவடையும் ரூபாவின் பெறுமதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறைப்பெறுமானத்தை எட்டியது. ஆனால் அரசாங்கம் மேற்கொண்ட சரியான பொருளாதார முகாமைத்துவத்தினால் ரூபாயின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 370 ஆக இருந்தது. இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 300 ஆக உள்ளது, எதிர்காலத்தில் அதை 280 ரூபாவாகக் குறைக்க எதிர்பார்க்கிறோம்.
அப்போது அரசாங்க செயற்பாடுகளுக்கான பணத்தைத் தேட வேண்டியுள்ளது. இன்று நாம் கடினமான பாதையில் சென்றாலும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியும். இதன் போது அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடிந்தது.
அத்துடன், சிங்களத் தமிழ்ப் புத்தாண்டுக் காலத்தில் நெல்லுக்கு சிறந்த விலையை வழங்க முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை! சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவித்த மைத்திரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |